Designed by Iniyas LTD
நாடு கடத்தப்பட்ட 13 இலங்கையர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தில் கைது !!
சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா சென்ற இலங்கையர்கள் 13 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த 13 பேரும் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நாடு கடத்தப்பட்ட 13 பேரும் ஆண்கள் என்பதுடன் படகு மூலம் அவுஸ்ரேலியா நோக்கி பயணித்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
குறித்த நபர்கள் குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் மூலம் மேலதிக விசாரணைக்காக குற்றப்புலணாய்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது