தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நியூசிலாந்து மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்த இந்தியா…!

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி-20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இன்று 2-வது டி20 போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற  நியூஸிலாந்து  அணி கேப்டன் வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

பின்னர் பேட்டிங்கை தொடங்கிய  நியூஸிலாந்து  அணி 20 ஓவர்களின் முடிவில்  8 விக்கெட்டை இழந்து  158  ரன்கள் அடித்தது.

இதன் பின்  பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 18.5 ஓவர்களில்  3 விக்கெட்டை இழந்து  163 ரன்கள் அடித்தது.

இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தியது இந்திய அணி.களத்தில் தோனி  20*,பண்ட் 40* ரன்களுடன் இருந்தனர்.

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதன் மூலமா  டி-20 போட்டியில் நியூசிலாந்து  மண்ணில் முதல் வெற்றியை பதிவு செய்தது இந்தியா .மேலும் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது இந்தியா.

Comments
Loading...