தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எம்.எஸ்.தோனியின் திறனை விமர்சிப்பவர்களுக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே பதிலடி…

எம்.எஸ்.தோனியின் திறனை விமர்சிப்பவர்களுக்கு ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் ஷேன் வார்னே பதிலடி கொடுத்துள்ளார்.

தோனியை விமர்சிப்பவர்கள், தாங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறோம் என்ற சிந்தனையே இல்லாதவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

கடினமான சூழ்நிலைகளில் தோனியைப் போன்ற ஒரு வீரர் நிச்சயமாக அணிக்கு தேவை என குறிப்பிட்ட வார்னே, அவரது அனுபவமும், நடுவரின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரும் டி.ஆர்.எஸ். முறையின் போது, அவர் எடுக்கும் முடிவுகளும் அணிக்கு உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  தலைசிறந்த வீரரான எம்.எஸ்.தோனி, உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் நிச்சயமாக இருக்க வேண்டியவர் என்றும்  ஷேன் வார்னே கூறியுள்ளார்.

Comments
Loading...