தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நூதன முறையில் கடத்தப்பட்ட கஞ்சா….பொலிஸாரால் பறிமுதல்…

யாழ்ப்பாணத்தில் இருந்து கற்பிட்டி நோக்கி  சென்ற குடும்பம் ஓன்று  பயணித்த முச்சக்கர வண்டியை ஓமந்தை, இறம்பைக்குளம் பகுதியில்  பொலிஸார்  சோதனை செய்த போது,

இருக்கையின் உள்ளே சூட்சுமமான முறையில் கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த முச்சக்கர வண்டியை செலுத்தி வந்த சாரதி கைது செய்யப்பட்டதோடு  அவரிடம் இருந்து ஓரு கிலோ 770 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் அவரை , நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கடந்த ஓரு வாரத்தில் சொகுசுக் கார் மற்றும் முச்சக்கர வண்டி என்பவற்றில்  8 கிலோ கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக   ஓமந்தை பொலிஸார்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...