தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பஞ்சாப் விமானப்படை தளத்திற்குள் இன்றும் தாக்குதல்

பஞ்சாப் மாநிலத்தில் விமானப்படை தளத்துக்குள் புகுந்து பெரும் நாசவேலைக்கு திட்டமிட்ட தீவிரவாதிகளின் முயற்சி நேற்று முறியடிக்கப்பட்டது. தாக்குதலுக்கு வந்த 5 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். பாதுகாப்பு படையினர் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்கள் தங்கள் இன்னுயிரை தியாகம் செய்து, விமானப்படை தளத்தை தகர்க்கும் எதிரிகளின் முயற்சியை தவிடு பொடியாக்கினர். panchap

இந்நிலையில், இன்று காலை அங்கு மீண்டும் ஒரு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டு வெடிப்பில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்துள்ளார். குண்டு வெடிப்புக்கான காரணம் குறித்த உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

தாக்குதலுக்கு வந்த 5 தீவிரவாதிகளும் கொல்லப்பட்ட நிலையில், நேற்று தாக்குதல் நடந்த விமானப்படை தளத்தில் இன்று காலை துப்பாக்கிசுடும் சத்தம் கேட்டு வருவதால் 6-வதாக தீவிரவாதி எவனும் பதுங்கியிருக்கலாம் என்ற பீதி அங்கே நிலவுகிறது.

Comments
Loading...