தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க அரசு திட்டம்

வடக்கில் காணப்பட்ட போர் சூழல் காரணமாக மூடப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.paranthan

தொழிற்சாலையை ஆரம்பிக்க 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர் விலை மனுகோரப்பட்டுள்ளது. பரந்தன் இரசாயன தொழிற்சாலை மூலம் நாட்டுக்கு தேவையான குளோரின் இரசாயனத்தை உற்பத்தி செய்ய முடியும் என அமைச்சர் றிசார்ட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் வருடாந்தம் 8 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டொலர் அந்நிய செலாவணி நாட்டுக்கு மீதமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Comments
Loading...