Designed by Iniyas LTD
மீள்குடியேற்றப் பயனாளிகளுக்காக வடக்கில் நிர்மாணிக்கப்படும் 5000 வீடுகள்
மீள்குடியேற்றப் பயனாளிகளுக்காக வடக்கில் நிர்மாணிக்கப்படும் 5000 வீடுகள், அடுத்த மாதம் 15ஆம் திகதி கையளிக்கப்படவுள்ளதாக மீள்குடியேற்ற அமைச்சு தெரிவித்துள்ளது.
மீள்குடியேற்ற அமைச்சினால் முன்னெடுக்கப்படும் 11 ஆயிரம் வீட்டுத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் நவம்பர் மாதம் 5000 வீடுகள் பயனாளிகளுக்கு கையளிக்கப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் வே.சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார். இவற்றில் ஆயிரம் வீடுகள் ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும், மிகுதி வீடுகளை பூர்த்திசெய்யும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த வீடுகளில், தாயகம் திரும்பவுள்ள இந்திய அகதிமுகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் 320 பேரும் குடியேற்றவுள்ளதாக சிவஞானஜோதி குறிப்பிட்டுள்ளார்.