தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாக் பெண்கள் என் மகளை போன்றவர்கள்! சுஷ்மா உருக்கம்

sushma-swaraj1-450x255கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் எல்லையை தாண்டி தீவிரவாதிகளின் 7 முகாம்கள் மீது இந்திய ராணுவம் எதிர்பாராத தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், கடந்த வாரம் பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் நடைபெற்ற உலக இளைஞர்கள் அமைதி திருவிழா நடந்தது. இதில் பாகிஸ்தானைச் சேர்ந்த 19 இளம் பெண்கள் கொண்ட குழுவினர் கலந்துகொண்டனர்.

போர் பதற்றம் நீடித்துவரும் நிலையில், திருவிழா முடிந்து இளம்பெண்கள் 19 பேரும் தற்போது பாதுகாப்பாக பாகிஸ்தான் திரும்புயுள்ளனர்.

இதை உறுதிபடுத்தும் வகையில், தங்களை பாதுகாப்பாக அனுப்பிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜுக்கு தங்களது நன்றியை டுவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

இந்த பதிவில், பாதுகாப்பாக தாய்நாடு திரும்ப உதவிய சுஷ்மாவுக்கு மில்லியன் நன்றிகள் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அலியா ஹரிர் என்பவரின் பதிவில், ‘‘இந்திய பண்பாட்டு விருந்தினர்கள் கடவுளைப் போன்றவர்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மத்திய அமைச்சர் சுஷ்மா பதிலளித்த டுவிட்டர் பதிவில், ‘‘பாகிஸ்தான் இளம்பெண்கள் என்னுடைய மகள்களைப் போன்றவர்கள்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Comments
Loading...