தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பான் பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி

பான் பசிபிக் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ஜப்பானில் நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் 2–வது சுற்று ஆட்டம் ஒன்றில் டென்மார்க் வீராங்கனை கரோலின் வோஸ்னியாக்கி 7–6 (7–4), 4–6, 6–4 என்ற செட் கணக்கில் ஸ்பெயின் வீராங்கனை கார்லா சுவாரஸ் நவ்ரோவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார்.tennis

மற்றொரு ஆட்டத்தில் புயர்டோரிகா வீராங்கனை மோனிகா புய்க் 1–6, 6–4, 6–4 என்ற செட் கணக்கில் செக் குடியரசின் பெட்ரா கிவிடோவாவை வீழ்த்தி கால் இறுதிக்குள் அடியெடுத்து வைத்தார். மற்ற ஆட்டங்களில் அக்னிஸ்கா ராட்வன்ஸ்கா (போலந்து), நாமி ஒசாகா (ஜப்பான்) ஆகியோர் வெற்றி கண்டு கால் இறுதிக்கு தகுதி பெற்றனர்.

Comments
Loading...