தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பிரித்தானியாவின்   பாரிய வளர்ச்சியில் தமிழ் மக்களின் மகத்தான பங்களிப்பும் உள்ளது- பிரதமர் தெரேசா மே…

பிரித்தானியாவின்   பாரிய வளர்ச்சிக்கு தமிழ் மக்களின் மகத்தான பங்களிப்பும்  உள்ளதாக  பிரிதானிய  பிரதமர் தெரேசா மே  தெரிவித்துள்ளார்.

அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு  தைப்பொங்கல் வாழ்த்து செய்தியிலேயா அவர்   இதனை வெளைப்படுத்தியுள்ளார்.

அதோடு தமிழ் மக்களின் அயராத கடின உழைப்பு, அர்ப்பணிப்பு, பெருந்தன்மை என்பன, நாட்டை சிறந்த முறையில் கட்டியெழுப்ப துணை புரிகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  பிரித்தானியாவின் மூலை முடுக்கெங்கும் வாழும் தமிழ் மக்கள் சகல விடயங்களிலும் நாட்டிற்கு பங்களிப்பு வழங்கியதாகவும், அதற்காக இன்றைய நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என்றும் அவர் தனது வாழ்த்தில்  கூறியுள்ளார்.

பிரித்தானியாவில் வாழும்  தமிழ் மக்கள் எண்ணிக்கையில் குறைந்தளவாக காணப்பட்டாலும், அவர்களின் பங்களிப்பு மகத்தானதென  பிரதமர் தெரேசா மே  அம்மையார் தனது வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(தினேசன் சிறிதரன் )
Thinesan Sritharan

Comments
Loading...