தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் விபத்து – ஒருவர் பலி நால்வர் காயம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைப்பாலை வீதியில் நேற்று திங்கட்கிழமை (11/01/2016) மாலை 6.45 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் காயமடைந்துள்ளனர்.Accident

இதுதொடர்பாகமேலும்தெரியவருவதாவது  பொக்கணையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி வந்த மோட்டார் சைக்களும் புதுக்குடியிருப்பிலிருந்து இரணைப்பாலை நோக்கிசென்ற மோட்டார் சைக்கிளிளும் நேருக்கு நேர்மோதிக் கொண்டதனாலயே இவ்விபத்து நேர்ந்துள்ளது  இந்த விபத்து சம்பவத்தில் பொக்கணையிலிருந்து புதுக்குடியிருப்பு நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த அம்பலவன் பொக்கணையை சேர்ந்த இளம் குடும்பத்தரான வாரித்தம்பிநந்தகுமார் என்னவர் சம்பவஇடத்தில்உயிரிழந்துள்ளார்.

இவரது மனைவி நந்தகுமார்கலைச்செல்வி (வயது-30) மகன் நந்தகுமார் பவித்திரன்(வயது-2) ஆகியோரும் புதுக்குடியிருப்பிலிருந்து இரணைப்பாலை நோக்கிசென்ற செம்மன்குன்று இரணைப்பாலையை சேர்ந்த முருகையா கலையரசன்(வயது-20) முருகையா நிசாந்தன்(வயது-25)ஆகியஇளைஞர்களுமாகநால்வர்காயமடைந்துள்ளனர்  இறந்தவரின் உடல் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு அவரது மனைவி மகள் உட்ப்படமூவர் படுகாயங்களுடன் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையிலிருந்து யாழ்ப்பாண போதணா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதோடு மற்றயவர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வருகிறார்  விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

Comments
Loading...