Designed by Iniyas LTD
சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்வது சவாலான விடயம் – டோனி
சொந்த மண்ணில் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்வது சவாலான விடயம் என்று இந்திய அணித்தலைவர் டோனி கூறியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி அங்கு 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடுகிறது. முதல் ஒருநாள் போட்டி நாளை பெர்த்தில் நடைபெறுகிறது. இது பற்றி இந்திய அணித்தலைவர் டோனி கூறுகையில், ”இந்திய அணியில் இடம் பெற்றுள்ள இளம் வீரர்களுக்கு இந்த தொடர் நல்ல வாய்ப்பாக அமையும். அவுஸ்திரேலிய அணியில் இளம் வீரர்கள் இடம் பெற்றிருந்தாலும் அவர்களது சொந்த மண்ணில் அவர்களை எதிர்கொள்வது எளிதல்ல. 3 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் 2 சுழற்பந்து வீச்சாளர்கள் என்ற உத்தியே இந்த தொடரில் பயன்படுத்த போகிறோம்.
மேலும், இந்த தொடரில் நல்ல தொடக்கம் என்பது சிறப்பானதாக அமையும். முழுமையாக செயல்பட்டு போட்டியில் வெற்றி பெற வேண்டும். இதற்கு சிறிய விடயங்களையும் சிறப்பாக செய்ய வேண்டும். இந்த தொடரில் பழிவாங்குதல் என்ற வார்த்தைக்கு இடம் இல்லை. முகமது ஷமி உலகக்கிண்ணப் போட்டியில் எப்படி மிரட்டினார் என்பது அனைவருக்கும் தெரியும். இந்த தொடரில் அவர் இல்லாதது வருத்தமளிக்கிறது. இந்தியா- அவுஸ்திரேலிய என இரு அணிகளும் நேரடி தொடரில் மோதிக் கொள்வதால் கண்டிப்பாக விறுவிறுப்பாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார். சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் நீடிக்க வேண்டும் என்றால் இந்த தொடரில் ஒரு வெற்றியாவது இந்திய அணி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.