தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிந்தைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் விடுதலைச் சிறுத்தைகள் கருப்பு நாள் கடைப்பிடிப்பு

சிங்கள அதிபர் இராஜபக்சே ஐ.நா. பொதுப்பேரவையில் உரையாற்றுவதற்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், டெசோ தீர்மானத்தின்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இன்று (25-9-2014) கருப்பு நாள் கடைப்பிடிக்கிறது. அதனையொட்டி காலை 10 மணியளவில் சென்னை, அசோக் நகர், நூறடிச் சாலையில் உள்ள கட்சியின் அலுவலகமான தமிழர் திடலில், தலைவர் தொல்.திருமாவளவன் கருப்புக்கொடி ஏற்றி கண்டன முழக்கங்களை எழுப்பினார். விடுதலைச் சிறுத்தைகள் ஏராளமானோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

VCK-balck-

Comments
Loading...