தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மதுக் கடைகளை மூட வலியுறுத்தி சட்டப்பஞ்சாயத்து

தமிழகம் முழுவதும் உள்ள மதுக் கடைகளை மூட வலியுறுத்தி சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பில் டாஸ்மாக் கடைகளுக்கு அஞ்சலி செலுத்தும் வினோத போராட்டம் நடைபெற்றுள்ளது.

tasmac_anjali_002லஞ்சம், ஊழல் மற்றும் மதுவை ஒழிப்பதற்காக பாடுப்பட்டு வரும் சட்டப்பஞ்சாயத்து இயக்கம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

ஏராளமான பெண்களும், ஆண்களும் பங்கேற்ற இந்த போராட்டம் மதுரையிலும் தமிழகத்தின் பல பகுதிகளிலும் இன்று நடத்தப்பட்டுள்ளது. மதுரை அண்ணா பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணா துரை தலைமை தாங்கியுள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், டாஸ்மாக் கடைகள் மூட வேண்டும், முதல் கட்டமாக அதன் வேலை நேரத்தை 12-ல் இருந்து 6 மணி நேரமாக குறைக்க வேண்டும். டாஸ்மாக் கடைகளுக்கு வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்பன உள்பட பல கோரிக்கைகளை கோஷங்களாக எழுப்பப்பட்டுள்ளன.

மேலும், போராட்டக்குழுவினர் இந்த போராட்டத்தை முன்னிட்டு டாஸ்மாக் என எழுதப்பட்ட போர்டுக்கு மாலை அணிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...