Designed by Iniyas LTD
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு தீபாவளி சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று 3254 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இரண்டாம் நாளான இன்று (வியாழக்கிழமை) 3 ஆயிரத்து 992 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
கடைசி நாளான நாளை 3 ஆயிரத்து 979 சிறப்பு பேருந்துகள் சென்னையில் இருந்து இயக்கப்படுகிறது. சென்னை கோயம்பேட்டில் சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் குறித்து தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘இடர்பாடு இன்றி பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கி வருவதாக’ கூறினார். மேலும், தற்காலிக பேருந்து நிலையங்கள் குறித்து பயணிகளுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே தமிழகம் முழுவதும் இன்று சிறப்பு பேருந்தில் பயணம் செய்ய 54 ஆயிரத்து 3 பேர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், இன்று சென்னையிலிருந்து சிறப்பு பேருந்தில் பயணிக்க 37ஆயிரத்து 107 பேர் முன்பதிவு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதே போல், தீபாவளிக்கு அடுத்த தினங்களான 30 மற்றும்31 ஆகிய தேதிகளில் 60 ஆயிரத்து 476 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதே போல், பிற பகுதிகளிலிருந்து சென்னைக்கு வர 58 ஆயிரத்து 837 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.