தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மலேசியாவில் பெட்ரோல் ஊற்றி கொளுத்தப்பட்ட தமிழர்!

hospital-450x254பட்டுக்கோட்டை அடுத்த அதிராம்பட்டினத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவர் மலேசியாவில் தனயார் ஓட்டலில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், ஓட்டலின் உரிமையாளருக்கும் இவருக்கும் ஏற்பட்ட தகராறில் கண்ணன் மீது பெட்ரோல் ஊற்றித் தீவைத்து கொளுத்தியதாக கூறப்படுகிறது.

இதில்,அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மலேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்தார். பின்னர், மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரக உதவியுடன் விமானத்தில் அவர் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

பின்னர், திருச்சி விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் மீண்டும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments
Loading...