தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி இறுதிப் போரில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூர்ந்து  முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு   கடைப்பிடிக்கப்படவுள்ளது

இந்நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைத் தடுத்து நிறுத்த வேண்டும் என  பௌத்த தகவல் கேந்திர நிலையம் மு/றைப்பாடு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பட்டை இன்று பொலிஸ் தலைமையகத்தில் அவர்கள்    பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“எதிர்வரும் 18ம் திகதி தமிழீழ விடுதலை புலி போராளிகளிற்கு  வடக்கு கிழக்கில் அஞ்சலி செலுத்தப்படவிருக்கின்றது.

இந்த நிகழ்வினை  நிறுத்துவதற்கான நீதிமன்ற உத்தரவை பெற்றுக்கொள்ள வேண்டும்” என  அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

பௌத்த தகவல் கேந்திர நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அங்குலுகல்லே ஸ்ரீ ஜீனாநந்த தேரர்  “இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை தேவை” என வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது..

Comments
Loading...