தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கும் மடு பிரதான வீதி

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச சபைக்கு சொந்தமான  இருட்டுமடு-உடையார்கட்டு பிரதான வீதி மக்கள் பாவணைக்கு மிகவும் இடையூறாக முப்பது வருடங்களுக்கு மேலாக கவனிப்பாரற்று கிடக்கின்றது. என பிரதேச மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

பாடசாலை மாணவர்கள்,அரச அதிகாரிகள்,விவசாயிகள்,சாதாரண பொதுமக்கள் என நாளாந்தம் பல்வேறு தேவைக்காக மக்கள் பயன்படுத்தும் இவ் வீதியை பிரதேச அரசியல் வாதிகளோ,அதிகாரிகளோ சீர்செய்யாமல் இருக்கும் வரை இருட்டுமடு மக்களது நாளாந்த வாழ்க்கை மிகவும் துன்பம் நிறைந்ததாகவே இருக்கும் என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில் பலரிடம் முறையிட்டும் எந்த தீர்வும் இதுவரை கிடைக்கவில்லை எனவும்,  சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்

Comments
Loading...