தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மோடி மங்கோலியாவுக்கு கடனுதவி வழங்க உறுதியளித்துள்ளார்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மங்கோலியாவுக்கு ஒரு பில்லியன் டாலர்கள் கடனுதவி வழங்க உறுதியளித்துள்ளார்.narendra_modi

மங்கோலியாவின் தலைநகர் உலன் பத்தோருக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நரேந்திர மோடி, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மேம்படுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதியும் ஸ்திரத் தன்மையும் மேம்படுத்தப்படும் என்றும் இந்தியப் பிரதமர் கூறியுள்ளார்.

‘எமது உலகின் புதிய ஜனநாயக வெளிச்சம்’ என்று மங்கோலியாவை மோடி வர்ணித்துள்ளார். மங்கோலியா கனிம வளங்கள் நிறைந்த நாடு. குறிப்பாக அங்கு பெருமளவு நிலக்கரி படிமங்கள் உள்ளன.

மங்கோலியாவில் உட்கட்டமைப்பு கட்டுமானங்களுக்காக பெருமளவு முதலீடுகள் தேவைப்படுவதாக செய்தியாளர்கள் கூறுகின்றனர். வணிகத்தில் மங்கோலியா பெரும்பாலும் சீனாவிடமே தங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...