தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வழக்கறிஞர்கள் போக்குவரத்து விதிகளை மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம் உத்தரவு

advocateதமிழகத்தில் வழக்கறிஞர் சின்னத்தை ஒட்டிக் கொண்டு தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அண்டை மாநிலங்களில் இள்நிலை சட்டப்படிப்பு(LLB)  படித்து விட்டு பலர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் வழக்கறிஞர்களாகப் பதிவு செய்துள்ளதாகவும், இவர்கள் வழக்கறிஞர் ஸ்டிக்கரை வாகனங்களில் ஒட்டிக்கொண்டு போக்குவரத்து விதிகளை மீறுவதாக கூறி வழக்கறிஞர் ரமேஷ்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.கே. கவுல், நீதிபதி சிவஞானம் ஆகியோர், வழக்கறிஞர் ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டு போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறையினர் தயக்கம் காட்டக்கூடாது என்றும், வழக்கறிஞர்களும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்றனர்.

போக்குவரத்து விதிமுறைகளை யார் மீறினாலும், காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, வழக்கை வரும் ஆகஸ்ட்  28-ஆம்  தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Comments
Loading...