தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

வவுனியாவில் வாளுடன் ஆவா குழு நபர் கைது!

வவுனியா – கேக்கவத்தை பகுதியில் இருந்து, நேற்று மாலை வாளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தேக்கவத்தை 12ஆம் ஒழுங்கையில் வசிக்கும் க. கனிஸ்டன் என்ற 25 வயதுடைய இளம் குடும்பஸ்தரே, இவ்வாறு சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவரது வீட்டில் இருந்து, வில்லுத்தகடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், 21.5 அங்குளமுடைய வாளொன்றும் மீட்கப்பட்டுள்ளது.

இவர் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வந்து தொழில் புரிந்து வந்த நிலையில் சந்தேகத்தின் பேரில், நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில் நேற்று மாணவக் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில், மாணவன் ஒருவன் காயமடைந்துள்ளார்.

காயமடைந்துள்ள மாணவன், வவுனியா பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Comments
Loading...