Designed by Iniyas LTD
வவுனியாவில் 15 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளான்
வவுனியாவில் 15 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக வவுனியா பொலிசில் சனிக்கிழமை (09) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் தனது பெற்றோருடன் வசித்து வந்த சிவகுமார் பிரசாந் (வயது 15) என்ற சிறுவனே .இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அவனது பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கடந்த முதலாம் திகதி தான் கல்வி கற்கும் சிதம்பரபுரம் சிறிநாகராஜா வித்தியாலயத்திற்கு சென்று விட்டு வீடு திரும்பிய பின்னர், மீண்டும் வீட்டில் இருந்து வெளியே சென்ற சிறுவன் இன்று வரை வீடு திரும்பவில்லை. இந் நிலையில், தமது உறவினர்கள், தெரிந்தவர்கள் எனப் பல இடங்களுக்கும் சென்று தேடிய நிலையில் சிறுவன் கிடைக்காமையால் வவுனியா பொலிஸ் நிலையத்தில் சிறுவனின் பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.