தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஹெய்டியில் சிறுவர்களை பாலியல் துஸ்பிரையோகம் செய்த ஸ்ரீலங்கா படையினர் நாடுகடத்தல்!

sexual-abuseஹெய்ட்டியில் ஐ.நா. அமை­திப் படை­யில் பணி­யாற்­றிய இலங்­கைப் படை­யி­னர், அங்­குள்ள சிறு­வர்­களைத் துர்ந­டத்தைக்கு உட்­ப­டுத்­தி­னர் என மிகப்­பெ­ரிய குற்­றச்சாட்டு முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.
 சுமார் 130 இலங்கை இரா­ணு­வத்­தி­னர் மீது இந்­தக் குற்­றச்­சாட்­டுக்­கள் சுமத்தப்­பட்­டுள்ளன. இந்­தத் தக­வலை ஏ.எவ்.பி. செய்­திச் சேவை வெளி­யிட்­டுள்­ளது.இலங்­கை­யில் நடை­பெற்ற இறு­திப்  ேபாரின்­போது, பாது­காப்­புத் தரப்­பி­னர் பாலி­யல் துர்­ந­டத்­தை­க­ளில் ஈடு­பட்­ட­னர் என்ற குற்­றச்­சாட்­டுக்­கள் பல­மாக எழுந்­தி­ருந்­த­போ­தும், அதனை இலங்கை அரசு நிரா­க­ரித்­தி­ருந்­தது.
இலங்­கைப் பாது­காப்­புப் படை­யி­னர் ஒழுக்­க­மா­ன­வர்­கள் என்று குறிப்­பிட்­டிருந்­தது. இவ்­வா­றா­ன­தொரு நிலை­யி­லேயே அமைதி காக்­கச் சென்ற இலங்­கைப் படை­யி­ன­ருக்கு எதி­ராக மேற்­படி குற்­றச்­சாட்டு முன் வைக்­கப்­பட்­டுள்ளது.
இதற்கு முன்­னர் 2013 ஆம் ஆண்­டி­லும் ஹெய்ட்­டி­யில் பணி­யாற்­றிய இலங்கை இரா­ணு­வத்­தி­னர் மீது பாலி­யல் துஷ்­பிரயோகக் குற்­றச்­சாட்­டுக்­கள் முன்­வைக்க ப்­பட்­டி­ருந்த நிலை­யில் இப்­போது மீண்­டும் அதே குற்றச்சாட்டு
சுமத்தப்பட்டுள்ளது. ‘ஹெய்ட்­டி­யில் பணி­யாற்­றிய 130 இலங்கை இரா­ணு­வத்­தி­னர் அங்­குள்ள சிறு­வர்­களை துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கி­யுள்­ள­னர். 12 வய­து­டைய சிறு­மி­கள் மற்­றும் சிறு­வர்­க­ளு­டன் இலங்­கைப் படை­யி­னர் பாலி­யல் உறவு கொண்­டுள்­ள­னர். சம்­ப­வத்­தில் பாதிக்­கப்­பட்ட சிறுமி, விசா­ர­ணை­யா­ளர்­க­ளி­டம் வழங்­கிய தக­வ­லில் சுமார் 50 அமை­திப் படை­யி­னர் தம்­மு­டன் உறவு கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதன்போது தளபதி 75 சதங்களைத் தமக்கு வழங்கினார் என்றும் சிலவேளைகளில் தாம் இராணுவ கனரக வாகனத்தில் உறங்கியதாகவும் சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
குற்றச்சாட்டுக்கு உள்ளான அமைதி காப்புப் படையினர் எவரும் தண்டிக்கப்படவில்லை. பதிலுக்குக் குற்றம் சுமத்தப்பட்ட 130 பேரில், 114 பேர் இலங்கைக்கு அனுப்பப்பட்டனர்’ என்று ஏ.எவ்.பி. செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்­து இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்னவிடம் வினவியபோது, குற்றச்சாட்டுக்கு இலக்காகியிருந்த இராணுவத்தினரை இராணுவக் கட்டளைத் தளபதி சேவையிலிருந்து நீக்கியுள்ளார். பாலியல் துஸ்பிரயோகக் குற்றச்சாட்டுக்கு இலக்கான அனைத்துத் துருப்பினர்கள் தொடர்பிலும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டது – என்றார்.
ஐ.நா. அமைதிப் படையில் உள்வாங்கப்படும் இலங்கைப் படையினர் மீது போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்கள் உள்ளதா என்பதை ஆராய்ந்து இணைத்துக் கொள்ளுமாறு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயிட் அல் ஹூசைன், கடந்த 34 ஆவது மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது குறிப்பிட்டிருந்தார்.
இத்தகைய குற்றச்சாட்டுக்கள் இலங்கைப் படையினர் மீது எழுந்துள்ள நிலையிலும், 700 படையினர் மாலியில் அமைதி காக்கும் ஐ.நா. படையுடன் அண்மையில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...