தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அகதிகள் முகாம்களில் 24 மணிநேர கண்காணிப்பில் கியூ பிரிவு போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்

பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்பிற்காக தமிழகத்தில் நாசவேலையில் ஈடுபட உளவு பார்த்த இலங்கையை சேர்ந்த அருண் செல்வராசனை தேசிய புலனாய்வு படையினர் சென்னையில் கைது செய்தனர். இலங்கை அகதி என பதிவு செய்துள்ள இவரை, போலீசார் சரியாக கண்காணிக்காததாலேயே இவரால் சர்வசுதந்திரமாக நடமாட முடிந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அகதிகள் முகாமில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு கியூ பிரிவு போலீசாருக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.chengalpattu refugee camp

தமிழகத்தில் மொத்தமுள்ள 112 அகதிகள் முகாம்களில் இலங்கையிலிருந்து வந்துள்ள 66 ஆயிரத்து 491 பேர் வசிக்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் 8 இடங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன. இதில் சுமார் 3 ஆயிரம் பேர் வரை தங்கியுள்ளனர். அகதிகள் முகாம்களில் 24 மணிநேர கண்காணிப்பில் கியூ பிரிவு போலீசார் ஈடுபட உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, அகதிகள் முகாமில் உள்ள இளைஞர்கள் யாரை சந்திக்கின்றனர், எங்கு பணிபுரிகின்றனர், அவர்களை தேடி யார் வருகின்றனர் என்பது குறித்து தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கியூ பிரிவு ஐஜி கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் கியூ பிரிவு போலீசார் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அகதிகள் முகாம்களில் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் வாரம் இருமுறை முகாம்களில் ‘ரோல்கால்‘ நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments
Loading...