தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அ.தி.மு.க. பிரமுகர் வைத்தியநாதன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை

ஆவின் பாலில் கலப்படம் செய்தது தொடர்பாக பிடிபட்ட அ.தி.மு.க. பிரமுகர் வைத்தியநாதன் வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினர். 506 (1)

ஆவின் பாலில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யும் விவகாரம் வெளியே தெரியவந்து, பலர் கைது செய்யப்பட்டனர். இந்த குற்றச்சாட்டில் முக்கிய குற்றவாளியான அதிமுக பிரமுகர் வைத்தியநாதன் சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி போலீசார் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை சரண் அடைந்தார். அவரிடம் சிபிசிஐடி போலீசார் விடிய விடிய விசாரணை மேற்கொண்டனர். சனிக்கிழமை காலை அவரை அசோக் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்ற சிபிசிஐடி போலீசார் அங்கு அதிரடி சோதனை மேற்கொண்டனர். சிபிசிஐடி எஸ்.பி. நாகஜோதி தலைமையிலான தனிப்படையினர் நடத்திய சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Comments
Loading...