தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அக்கரைப்பற்றில் தமிழ் முஸ்லிம்கள் இடையே முறுகல்…

ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளரை விடுவிக்கக் கோரி, அக்கரைப்பற்றில் தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில்  அந்தப் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அக்கரைப்பற்று 40 ஆம் கட்டை பகுதியில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுடன் தொடர்புபட்டார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ஆலயடிவேம்பு பிரேதேச சபைத் தவிசாளர் க.பேரின்பராசாவை, எதிர்வரும் 26ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம் நேற்றைய தினம்  உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த தவிசாளரை விடுவிக்கக் கோரி அப் பிரதேச தமிழ் மக்கள் கோசங்களை எழுப்பி, பதாகைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று- அம்பாறைவீதி, அக்கரைப்பற்று- சாகமம் வீதி போன்றவற்றில் தமிழ் மக்களும் கல்முனை- அக்கரைப்பற்று வீதியில் முஸ்லிம் மக்களும் முற்றுகையிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதோடு நிலமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர அங்கு பொலிஸார்  குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாக்  அக்கரைப்பற்றுப்பிரதேசத்தில் மிகவும் பதற்றமான சூழ்நிலை  காணப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளாமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...