தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யாழ் மல்லாகத்தில் சந்தேகத்தின் பேரில் 6 பேர் பொலிஸாரால் கைது..

யாழ். மல்லாகம் பகுதியில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு முன்னர் இடம்பெற்ற குழு மோதலுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இதுவரை 6 இளைஞர்களை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்தில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணியளவில் இரு குழுக்களுக்கு இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.  சம்பவத்தின் போது, அப்பகுதிக்குச் சென்ற பொலிஸார் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்திருந்தார். 

அதன்  பின்னர் குழு மோதலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டதோடு,  குறித்த சம்பவம் தொடர்பில்   இரு இளைஞர்கள் நேற்றையதினம்  விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்தாகவும் கூறப்பட்டுள்ளது.

விசாரணையின் பின்னர், அவர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் பிரகாரம் இன்று (21) காலை அதே இடத்தைச் சேர்ந்த  மற்றும் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இதேவேளை குறித்த மோதல் சம்பவம் தொடர்பில்  40 இளைஞர்களை கைதுசெய்ய  உள்ளதாக ஒலிஸார் ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...