தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அங்கிலிக்கன் திருச்சபையின் ஆன்மீக தலைவர் இலங்கை வருகிறார்

அங்கிலிகன் திருச்சபையின் ஆன்மீகத் தலைவரான ஆயர் ஜஸ்டின் வெல்பி, ஒற்றுமையின் அடையாளமாக வியாழக்கிழமை இலங்கைக்கு மூன்று நாள் விஜயம் செய்கிறார். 105 க்கும் மேற்பட்ட நாடுகளில் 85 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டுள்ள உலகளாவிய அங்கிலிகன் சமூகத்தின் ஆன்மீகத் தலைவராக ஆயர் ஜஸ்டின் வெல்பி உள்ளார்.

ஒற்றுமை பயணத்தின் முதல் நாளில், கட்டுவாப்பிட்டிய சென் செபஸ்டியன் தேவாலயத்திற்கு சென்று, குண்டுத்தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பார். கர்தினால் மல்கம் ரஞ்சித்தும் இந்த பயணத்தில் இணைந்திருப்பார். பிற்பகலில் அலரிமாளிகையில் பிரதமர் ரனில் விக்கிரமசிங்கவை சந்திப்பார், பின்னர் அவர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பார். அதன்பிறகு கொழும்பு மறைமாவட்ட வளாகத்தில் நடைபெறும் ஒரு சிறப்பு கூட்டத்தில் கலந்துகொள்வார். இதில் அனைத்து தேவாலயங்களின் தலைவர்களும் பங்கேற்பார்கள்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனாவினால் வழங்கப்படும் இரவு உணவில் பங்கேற்பார். ஓகஸ்ட் 30ம் திகதி, பேராயர் மறைமாவட்ட வளாகத்தில் மரம் நடவு செய்வார். பின்னர் அவர் கண்டிக்கு சென்று, தலாதா மாளிகையில் வழிபாட்டில் ஈடுபடுவதுடன், மகாநாயக்க தேரர்களையும் சந்திப்பார். பின்னர் கொழும்பில் சில நிகழ்வுகளில் பங்கேற்பார்.


Comments
Loading...