தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அச்சுவேலியில் புத்தக கடையொன்றில் தீ- பல இலட்சம் பெறுமதியான புத்தகங்கள் எரிந்து நாசம்…

யாழ்ப்பாணம் அச்சுவேலியில் புத்தக கடையொன்று திடீரென தீப்பிடித்ததில், அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான புத்தகங்களும், பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.

இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கபப்டுள்ளது.

புத்தகக் கடையை நேற்று மாலை பூட்டிவிட்டுச் சென்ற நிலையில் இன்று அதிகாலை இப் புத்தகக் கடை எரிந்துள்ளது.

இதனை  அடுத்து  தீயணைப்பு பிரிவினருக்கு தகவல் வழங்கியடையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...