Designed by Iniyas LTD
யாழ்.மாவட்டத்தில் காணி விடுவிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறும்- இராணுவக் கட்டளைத் தளபதி
யாழ்.மாவட்டத்தில் காணி விடுவிப்புக்கள் தொடர்ச்சியாக இடம்பெறுமென யாழ். மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.
யாழ்.பலாலியில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம்-21 ஆம் திகதி யாரும் எதிர்பாராத வகையில் நடாத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பல நூறு உயிர்கள் காவு கொள்ளப்பட்டன. இதனால் வலிகாமம் வடக்கில் விடுவிக்கப்படவிருந்த 25 ஏக்கர் காணி விடுவிப்புத் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த காணிகள் ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய விடுவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் யாழ்.மாவட்டத்தில் இராணுவத்தினரின் பாவனையிலுள்ள காணிகளை விடுவிப்பதில் எந்தவித பாதுகாப்பு அச்சுறுத்தலுமில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார் .