Designed by Iniyas LTD
அடிமைகளாக விற்பனை செய்யப்படும் நேபாள குழந்தைகள்
நேபாளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டு வேலைக்காக பிரித்தானியாவிற்கு உள்நாட்டு அடிமைகளாக விற்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Sun என்ற அமைப்பு மேற்கொண்ட விசாரணையில், பத்துவயதுக்குட்பட்ட ஆண், பெண் குழந்தைகள் 5,250 யூரோவுக்கு விற்பனை செய்யப்படுகின்றன. பணக்கார பிரித்தானிய குடும்பத்தினர் இக்குழந்தைகளை ஊதியம் கொடுக்காமல் வீட்டு வேலைக்கு பயன்படுத்திக்கொள்கின்றனர். குறிப்பாக இக்குழந்தைகள் இங்கிலாந்திற்குதான் அதிகமாக விற்கப்படுகின்றன, நேபாளிய குழந்தைகள் நல்ல பிள்ளைகளாக இருப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் வீட்டு வேலைகளை திறம்பட செய்கின்றனர். அதுமட்டுமின்றி சமையல் கலையில் சிறந்து விளங்குவதால் பிரித்தானிய பணக்காரர்களும் இக்குழந்தைகளை பேரம் பேசி வாங்கி வருகின்றனர்.
கடந்த ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நேபாள் நாட்டில் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுமார் 9,000 பேர் உயிரிழந்தனர், தற்போது வரை மில்லியன் கணக்கில் மக்கள் உதவியை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் Theresa may கூறியதாவது, குழந்தைகளை அடிமைகளாக பயன்படுத்துவது உண்மையிலேயே அருவருப்பான குற்றம் ஆகும்.
சிறுகுழந்தைகள் வீட்டுவேலைகளை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர், கடந்த ஆண்டு குழந்தைகளுக்கு எதிரான landmark Modern Slavery என்ற சட்டத்தை அமல்படுத்தினோம், அந்த சட்டத்தின் கீழ், பாதிக்கப்பட்ட குழந்தைகளை பாதுகாத்தல் மற்றும் குற்றம் புரிந்தவர்களுக்கு ஆயுள் தண்டனை போன்றவை கொண்டுவரப்பட்டன ஆனால் இப்படி ஒரு சட்டம் இருந்தும், இதுபோன்ற கீழ்த்தரமான முறையில் வர்த்தகம் செய்யும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறியுள்ளார்.