தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் மே மாதம் 8 ஆம் திகதி

அடுத்த நாடாளுமன்ற கூட்டத் தொடர் மே மாதம் 8 ஆம் திகதி பிற்பகல் 2.15க்கு ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தகவலை நாடாளுமன்ற பொதுச் செயலாளர் தம்பிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலக அதிகாரிகள் இது தொடர்பில் நாடாளுமன்ற அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள ஜனாதிபதி இன்றைய தினம் நாடு திரும்பியதும் இது தொடர்பிலான புதிய வர்த்தமானி வெளியிடுவார் என்றும் நாடாளுமன்ற பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

இதேவேளை கடந்த 12 ஆம் திகதி நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத் தொடர் ஆரம்பமாகும் தினம் குறித்த வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி  வெளியிட்டிருந்த போதிலும், அதில் திகதி குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...