தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் இன்று விசேட  சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இன்று விசேட  சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை சட்டம்ன் ஒழுங்கு மற்றும் அரச நிர்வாக அமைச்சர் ரஞ்சித் மத்துமபண்டார  தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின்போது அமைச்சரவை மாற்றம் மற்றும் புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்படும் எனவும்  எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு ஆதரவளித்து,தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிச் சென்ற ஆறு அமைச்சர்களுக்கு பதிலாக நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சர்கள் குறித்தும் இதன்போது ஆராயப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...