Designed by Iniyas LTD
அடெல் பாலசிங்கமே பாடசாலை மாணவியரின் கழுத்தில் சயனைட் மாட்டி விட்டார் -சிங்கள நாளேடு

தமிழீழ விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர் அன்ரன் பாலசிங்கத்தின் பாரியார் அடெல் பாலசிங்கத்திற்கு எதிராக இணையத்தில் மகஜர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அடெல் பாலசிங்கம் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டே இணையத்தில் மகஜர் வெளிவந்துள்ளது.
போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்ட அடெலை கைது செய்யுமாறு கோரி இவ்வாறு கையொப்பங்கள் திரட்டப்படுவதாக சிங்கள நாளேடொன்று செய்திவெளியிட்டுள்ளது.
வன்னியில் பாடசாலை மாணவியரின் கழுத்தில் சயனைட் குப்பிகளை அடெல் பாலசிங்கமே மாட்டி விட்டார் என குற்றம் சுமத்தப்பட்டே இணையத்தின் ஊடாக இந்த மகஜருக்கான கையொப்பங்கள் திரட்டப்படுவதாகவும், இந்த மஜகரில் வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் ஆயிரக் கணக்கில் கையொப்பமிட்டுள்ளனர் என்றும், இந்த மகஜர் பிரிட்டன் பிரதமர் கமரூனிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.