தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நெடுந்தீவில் மின் தாக்கி 13 வயது சிறுவன் சாவடைந்துள்ளான்.

download

நெடுந்தீவு 5 ஆம் வட்டாரத்தில் மின்சாரம் தாக்கி 13 வயதுச் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

நேற்று முன்னாள் காலை இந்தச் சம்பவம் இடம் பெற்றபோதும் சிறீலங்கா காவல்துறையினர் நேற்று இரவு சுமார் 7 மணியளவிலேயே பதில் நீதி வானுக்குத் தகவல் தெரிவித்ததாகவும் அதனால் சிறுவனின் சடலம் அகற்றப்படாது சம்பவ இடத்திலேயே இஇருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்றைய தினமே அந்த இடத்திலிருந்து சடலம் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. .இது தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது:
நெடுந்தீவில் நேற்று முன்னாள்அதிகாலை தொடக்கம் மழை பெய்துள்ளது. அதனால் சம்பவ இடத்திலுள்ள ஆலமரம் ஒன்று சரிந்து மின்கம்பியில் முட்டியவாறு இருந்துள்ளது.

அதில் பனையோலை ஒன்று காணப்பட்டமையால் அதனை எடுப்பதற்குச் சிறுவன் முற்பட்ட போதே மின்தாக்குதலுக்கு இலக்காகிச் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான். சிறுவனைக் காணாது பெற்றோர் தேடியபோதே சிறுவன் உயிரிழந்தமை தெரியவந்ததாக.தெரிவிக்கப்படுகிறது

Comments
Loading...