தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அட்டாக் பாண்டிக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்!

BLINK_2903_ATTACK-121பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அட்டாக் பாண்டியை 15 நாள் நீதிமன்றக்காவலில் வைக்க மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 அவரை 10 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கக்கோரும் காவல்துறை மனு மீது இன்று விசாரணை நடைபெற உள்ளது. பொட்டு சுரேஷ் கொலை வழக்கு, ஆள்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த அட்டாக் பாண்டியை தமிழக சிறப்பு காவல் படையினர் மும்பையில் கைது செய்தனர்.

 இதையடுத்து விமானம் மூலம் மதுரைக்கு கொண்டுவரப்பட்ட அட்டாக் பாண்டியை ஆயுதப்படை மைதானம் அருகே உள்ள காவல்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

 பின்னர் மாலையில், மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அட்டாக் பாண்டியை அக்டோபர் 6 ஆம் தேதி வரை 15 நாட்கள் நீதிமன்றக்காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி பாரதிராஜா உத்தரவிட்டார். இதையடுத்து அட்டாக் பாண்டி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Comments
Loading...