Designed by Iniyas LTD
அணு ஆயுதங்களை அழிப்பதற்கு வடகொரியாவுக்கு காலக்கெடு இல்லை – டிரம்ப்.
வடகொரியா அணு ஆயுதங்களை அழிப்பதற்கு கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் ட்ரம்பும் கடந்த மாதம் 12-ம் தேதி சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
இதன்போது அணு ஆயுதங்களை அழிக்க வடகொரியாவும் அந்த நாட்டுக்கு பாதுகாப்பு அளிக்க அமெரிக்காவும் ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.
தொடர்புடைய பதிவு
இந்த சந்திப்புக்குப் பிறகு, அணு ஆயுதங்களை அழிக்கும் நடவடிக்கை உடனடியாக தொடங் கும் என ட்ரம்ப் கூறியிருந்தார்.
இந்நிலையில்”வடகொரியாவுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது. அணு ஆயுதங்களை அழிக்க கால வரையறை எதுவும் நிர்ணயிக்கப் படவில்லை என அமெரிக்க அதிபர் கூறியுள்ளார்.
அதோடு இந்த விவகாரத்தில் அவசரப்படத் தேவையில்லை என்றும் . வடகொரியா மீதான பொருளாதார தடைகள் தொடர்கின்றன. அங்கு புதிதாக ஆயுத சோதனை எதுவும் நடைபெறவில்லை எனவும் . இரு நாடுகளுக்கிடையிலான உறவு நன்றாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
