தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழ் மக்களின் காணிகளை விடுவிக்க காசு கேட்கும் தமிழின அழிப்பு இராணுவம்

யாழ்.வலிகாமம் வடக்கு உயா்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட ஒரு பகுதி காணியை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் பணம் தேவை அதனை அரசாங்கம் கொடுக்கவில்லை. ஶ்ரீலங்கா பிரதமா் முன்னிலையில் தமிழின அழிப்பு இராணுவம் கூறியுள்ளது. யாழ்.மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் நேற்றைய தினம் ஶ்ரீலங்கா பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் யாழ்.மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. இதன்போதே இராணுவம் மேற்கண்டவாறு கூறியுள்ளது.

குறித்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கருத்து கூறும்போது பலாலி வீதியின் கிழக்கு புறமாக உள்ள மிக வளமான விவசாய நிலங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதை சுட்டிக்காட்டியதுடன், குறித்த காணிகள் விடுவிக்கப்படவேண்டும் என வலியுறுத்தினா். தொடா்ந்து நாடாளுமன்ற உறுப்பினா் மாவை சேனாதிராஜாவும் அதனை வலியுறுத்தியுள்ளதுடன், வல்லை அராலி வீதி மற்றும் மயிலிட்டியில் 3 கிராமசேவகா் பிரிவுகள் தொடா்ந்தும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளதுடன் இராணுவத்தின் இந்த நடவடிக்கை பொருளாதார மேம்பாட்டுக்கு பாரிய தடை என சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளித்த யாழ்.மாவட்ட ஶ்ரீலங்கா இராணுவ தளபதி மேற்படி காணிகளை விடுவிப்பதற்கு 1200 மில்லியன் ரூபாய் நிதியை அரசாங் கத்திடம் கோரியிருந்தோம் ஆனால் அந்த நிதியை அரசாங்கம் தரவில்லை என்றார்.


Comments
Loading...