தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிகாலையில் சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம்

இன்று அதிகாலை சீனாவின் ஜெலின் பகுதியில்  மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இது 5 புள்ளி 7 ஆக பதிவானது.

நிலநடுக்கத்தால் சோன்குயான் நகரில் சில வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. வீடுகள் குலுங்கியதால் மக்கள் பீதியடைந்து வீதிகளில் தஞ்சம் புகுந்தனர்.

இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டதாக தகவல் இல்லை. மின்சாரம் மற்றும் தொலைத் தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டதால் முழுவிவரமும் சில மணி நேரம் கழித்தே தெரிய வரும்.

மீட்பு மற்றும் பேரிடர் நிவாரணக் குழுக்கள் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ளன.

Comments
Loading...