தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

இன்றைய நாளில்…

மே 28

தொடர்புடைய பதிவு
  • 1503 – ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் அமைதி உடன்பாடு ஏற்ப்பட்டது. இது 10 ஆண்டுகளில் முறிந்தது.
  • 1588 – 30,000 பேர்களுடன் ஸ்பானிய ஆர்மாடா எனப்படும் 130 ஸ்பானியக் கப்பல்கள் பிரித்தானியக் கடற்படையினருடன் மோதும் பொருட்டு ஆங்கிலக் கால்வாயை நோக்கிய பயணத்தை லிஸ்பனில் இருந்து ஆரம்பித்தன.
  • 1737 – வீனஸ் கோள் மேர்க்குரி கோளின் முன்னால் கடந்ததை ஜோன் பேவிஸ் என்ற வானியலாளர் அவதானித்தார்.
  • 1815 – சிங்கள-முஸ்லிம் கலவரம்.
  • 1905 – ரஷ்ய-ஜப்பானியப் போர்: சூஷிமா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் ரஷ்யக் கடற்படையின் பால்ட்டிக் பிரிவு ஜப்பானியர்களால் அழிக்கப்பட்டது.
  • 1915: இலங்கையின் கண்டியில் சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஆரம்பித்து ஜூன் 5 இல் முடிவுக்கு வந்தது.
  • 1937 – கலிபோர்னியாவில் கோல்டன் கேட் பாலத்தை பிராங்கிளின் ரூஸ்வெல்ட் அதிகாரபூர்வமாக திறந்து வைத்தார்.
  • 1940 – இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம் ஜெர்மனியிடம் சரணடைந்த்து.
  • 1942 – இரண்டாம் உலகப் போர்: நாசிகள் தமது சகாவான ரைன்ஹார்ட் ஹைட்ரிக் படுகொலை செய்யபட்டமைக்குப் பதிலடியாக செக்கோசிலவாக்கியாவில் 1800 பேரைப் படுகொலை செய்தனர்.
  • 1958 – இலங்கை இனக் கலவரம், 1958: இலங்கையின் ஆளுநர் சேர் ஒலிவர் குணதிலக அவசரகாலச் சட்டத்தைக் கொண்டு வந்தார்.
  • 1964 – பாலஸ்தீன விடுதலை இயக்கம் தோற்றுவிக்கப்பட்டது.
  • 1974 – வட அயர்லாந்தில் அதிகாரப் பரவலாக்கம் குறித்த சன்னிங்டேல் உடன்பாடு முறிந்தது.
  • 1987 – மேற்கு ஜேர்மனியைச் சேர்ந்த 19-வயது மத்தாயஸ் றஸ்ட் சிறிய ரக விமானம் ஒன்றில் மொஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் தரையிறங்கினார். உடனடியாகக் கைது செய்யப்பட்ட இவர் ஆகஸ்ட் 13, 1988இல் விடுவிக்கப்பட்டார்.
  • 1991 – எதியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவை எதியோப்பிய மக்கள் புரட்சி சனநாயக முன்னணியினர் கைப்பற்றினர். எதியோப்பிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
  • 1995 – ரஷ்யாவின் நெஃப்டிகோர்ஸ்க் நகரில் இடம்பெற்ற 7.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
  • 1998 – பாகிஸ்தான் ஐந்து அணுவாயுதச் சோதனைகளை நிகழ்த்தியது. ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், மற்றும் சில நாடுகள் பாகிஸ்தானுக்கெதிராக பொருளாதாரத் தடைகளை அறிவித்தன.
Comments
Loading...