தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிக காற்று மாசு உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு மூளைத் திறன் பாதிக்கும் – ஆய்வின் முடிவுகள்

சீனாவில், 20 ஆயிரம் பேரிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் முடிவுகள் அதிர்சியினை  ஏற்படுத்தியுள்ளது.

அதிக காற்று மாசு உள்ள இடங்களில் வசிப்பவர்களுக்கு, அவர்கள் சுவாசிக்கும் நச்சுக்களால் மூளைத் திறன் பாதிக்கப்படுவதாக, அந்த  ஆய்வு தெரிவிக்கிறது.

இந்த ஆய்வினை பன்னாட்டு ஆய்வாளர்கள் செய்துள்ளனர்.

பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் பங்கேற்ற இந்த நீண்ட கால ஆய்வு, ஆண்டுக்கு ஒருமுறை என, நான்கு ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டது.

ஆய்வில் பங்கேற்றோருக்கு, எளிய கனித புதிர்கள் மற்றும் சொல் விளையாட்டுகள் தரப்பட்டன.

அவர்களில் யாரெல்லாம், நைட்ரஜன் டையாக்ஸைடு மற்றும் சல்பர் டையாக்ஸைடு போன்ற நச்சுக்களை சுவாசித்தனரோ, அவர்களுக்கு மூளைத்திறன் கவனிக்கத்தக்க அளவு பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக ஆய்வில் பங்கேற்றோரில் அதிக வயது உள்ளோருக்கு சொல் ஆற்றல் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இந்த ஆய்வு சீனாவில் நடத்தப்பட்டது என்பது குறிப்பிட்டு சொல்லவேண்டிய விடயம் .

Comments
Loading...