Designed by Iniyas LTD
பாலிவுட் சூப்பர் ஸ்டார் உடன் இணையும் எஸ்.ஜே.சூர்யா…
பாலிவுட் சூப்பர் ஸ்டார் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் அமிர்தாப் பச்சனுடன் இணைந்து பிரபல இயக்குனரும் நடிகருமான ஏ.ஜே.சூர்யா இணைந்து நடிக்கவுள்ளார்.
இவருடன் தமிழில் ஒருபடமாவது நடிக்க வேண்டும் என்பது ரஜினியின் ஆசை. ஆனால் அவரது விருப்பம் இதுவரை நிறைவேறவில்லை.
இந்நிலையில் தமிழ் திரைப்படம் ஒன்றில் அமிர்தாத் பச்சன் அறிமுகமாகிறார்.
இப்படம் இந்தியிலும் எடுக்கப்படுகிறது. இப்படத்திற்கு ‘ உயர்ந்த மனிதன் ‘ என பெயரிட்டுள்ளது.
இந்நிலையில் எஸ்.ஜே.சூர்யாவை நேரில் சந்தித்து, நடிகர் ரஜிகாந்த் வாழ்த்து தெரிவித்ததோடு ‘ உயர்ந்த மனிதன் ‘ படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளதாக கூரப்படுகின்றது.
