Designed by Iniyas LTD
அதிமுகவிற்கு எதிரான பொய் தோற்றத்தை உருவாக்கும் திமுக
மக்கள் மத்தியில் அதிமுக அரசின் சாதனைகளுக்கு எதிராக பொய்யான தோற்றத்தை திமுக ஏற்படுத்தி வருவதாக அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் திமுகவினர் பொய் பிரச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்தார் சேலம் கோட்டை பகுதியில்சேலத்தில் நடைபெற்ற அதிமுக அரசின் ஐந்தாண்டுகள் சாதனை விளக்கக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, கோகுல இந்திரா, வளர்மதி ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக அரசின் சாதனைகளுக்கு எதிராக திமுக பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம்சாட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அதிமுக மகளிர் அணி செயலாளரும், மாநில கைத்தறித்துறை அமைச்சருமான கோகுல இந்திரா, அதிமுக அரசின் சாதனைகளை நம்பியே முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தலை சந்திக்கவுள்ளதாக தெரிவித்தார். அதிமுக தனித்து நின்று வெற்றிபெரும் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மாநில சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி, பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் நிலையில் அதிமுக இல்லை என்று கூறினார். தேமுதிகவை விமர்சித்த வளர்மதி, பொதுக்கூட்டத்தில் விஜயகாந்தைப் போன்று நடித்துக் காண்பித்தார்.