தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் 7 பேர் அதிரடியாக மாற்றம்

அதிமுக  மாவட்டச் செயலாளர்கள் 7 பேர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   தமிழகத்தில் விரைவில் சட்ட மன்றத் தேர்தல் வரஉள்ளது.transfer

இந்த நிலையில், 234 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறவேண்டும் என தனது கட்சி தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.   மேலும், தேர்தல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுக் குழுக்கூட்டத்தில் ஜெயலலிதா அறிவித்தார்.    தற்போது, அதிமுகவை வீழ்த்தியே ஆகவேண்டும் என திமுக மற்றும் எதிர்க் கட்சிகள் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

இதனால், அதிமுகவை வெற்றி பெற வைக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் துள்ளலான மாவட்டச் செயலாளர் வேண்டும் என ஜெயலலிதா கருதுவதாக கூறப்படுகிறது.      இதனையடுத்து, அதிமுகவில் முறையாக கட்சிப் பணியாற்றாத மாவட்டச் செயலர்கள் ஏழு பேரை மாற்ற, ஜெயலிலதா முடிவு செய்துள்ளராம்.    இந்த லிஸ்ட்டில், திருச்சி புறநகர், துாத்துக்குடி, நெல்லை, சென்னை மாவட்ட செயலர்கள் இருவர், வேலுார் கிழக்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ஏழு பேர் பெயர்கள் இடம் பெற்றுள்ளார்களாம். இவர்களுக்குப் பதில் புதிய மாவட்டச் செயலாளரை நியமிக்க ஜெயலலிதா முடிவு செய்துள்ளராம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Comments
Loading...