தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

26கோரிக்கைகளை முன்வைத்து ரயில்வே ஊழியர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்

ரயில்வே ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த உள்ளனர். இது குறித்து  டிஆர்இயூ சங்க செயல் தலைவர் ஆர்.இளங்கோவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  st

தற்போது உள்ள புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்,  தனியார் மயமாக்கலை தடுக்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 26 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரயில்வே ஊழியர்கள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்த  முடிவு செய்துள்ளோம்.

இதற்கான நோட்டீசை மார்ச் 11 ஆம் தேதி அன்று, ரயில்வே மண்டல பொது மேலாளர்களிடம் வழங்க உள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தில் நாடு முழுவதும் உள்ள 13 லட்சம் ரயில்வே ஊழியர்கள்  கலந்து கொண்டு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர் என்றார்.

Comments
Loading...