Designed by Iniyas LTD
அத்துமீரும் விஷால்! சட்டத்தை கையில் எடுக்கும் தயாரிப்பாளர் சங்கம்!
குற்றம் சாட்டப்படுவரை தேடவும், அவருடைய புகைப்படத்தை உலகெங்கும் வெளியிடுவதும் அரசு, காவல் துறை அல்லது சிபிஐ தான் செய்ய்ய முடியும். இதை நன்கு அறிந்தும் விஷால் இங்கிலாந்தில் உள்ள தமிழ்ராக்கர்ஸ் “அட்மின்” டிக்ஸன் ராஜ் மற்றும் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ்ராக்கர்ஸ் இணையத்தின் “அட்மின்” அர்விந்த் லோகேஸ்வரன் ஆகியோரின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
டிக்ஸன் ராஜ் மற்றும் அர்விந்த் லோகேஸ்வரன்தான் குற்றவாளிகள் என்று விஷாலுக்கு எப்படி தெரியும்? அவர் என்ன சிபி சி.ஐ.டி அதிகாரியா? அது மட்டும் இல்லாமல் இந்த தமிழர்கள் வெளிநாட்டில் உள்ளனர். இந்த அத்துமீறலால் அவர்களுக்கு அந்த நாடுகளில் தீங்கு நடந்தால் யார் பொருப்பு ஏற்பார்? வெளிநாட்டில் இருக்கும் தமிழர்களை விசாரணை செய்ய் “இன்டர்போல்” எனப்படும் பன்னாட்டு காவல் துறை மூலமாக அல்லது மைய அரசு மூலம் தான் செல்ல வேண்டும்.
திரைப்பட அதிகாரம் அரசு அதிகாரம் இல்லை. இதை புரிந்துகொள்ளாமல் அத்துமீறும் விஷால் மேல் சட்ட வழக்கு வந்தால் அது “நுனலும் தன் வாயால் கெடும்” கதை தான்