தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அனந்தி சசிதரனின் சமகால நடவடிக்கைகள் மீது அதிர்ப்தியடைந்த மாவை

வடக்கு மாகாண சபை உறுப்பினர் திருமதி அனந்தி சசிதரனின் சமகால நடவடிக்கைகள் மீது அதிருப்தியடைந்த தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை. சேனாதிராசா கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்து இன்று காலை அனந்தியைத் திட்டியுள்ளார்.ananthy

இதன்பொழுது அனந்தியின் நடவடிக்கைகள் தொடர்பில் துர்வார்த்தைகளை மாவை. சேனாதிராசா பிரயோகித்தமையினால் திடீரென மயக்கமுற்ற அனந்தியை அவருடைய ஆதரவாளர்கள் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தற்பொழுது அனந்தி சுகமடைந்து வீடுதிரும்பியுள்ளார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணி வேட்பாளர் மைத்திரிக்கு ஆதரவளித்துள்ளமை தொடர்பில் அனந்தி தனது தனிப்பட்ட கருத்தை வெளியிட்டு எதிரான அறிகையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தமை கூட்டமைப்பின் தலைமைகள் மத்தியில் கடுமையான விமர்சனத்தைத் தோற்றுவித்துள்ளது.

இதன் வெளிப்பாடாக புலம்பெயர்ந்தேரின் சில இணைய ஊடகங்கள் அனந்திக்கு எதிராக செய்திகளைப் பிரசுரித்துள்ளன.

இந்நிலையில் இன்று காலை அனந்தியைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மாவை.சேனாதிராசா அனந்தியின் நடவடிக்கைகள் தொடர்பில் தமது கண்டனத்தையும் அதிர்ப்தியையும் நேரடியாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் புலிகளுக்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனவும் மக்கள் கூட்டமைப்பிற்கே வாக்களித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதன்பொழுது அனந்தியின் தனிப்பட்ட வாழ்க்கைக்கு களங்கம் ஏற்படுகின்ற வகையில் மாவை எம்.பி திட்டியமையினால் வீட்டில் அந்த இடத்திலேயே அனந்தி மயங்கிவிழுந்துள்ளார்.

இவருக்கு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட குருதி அமுக்கத்தால் இந்த மயக்கம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்து சிகிச்சையளித்துள்ளனர். ஆனந்தி தற்பொழுது வீடு திரும்பியுள்ளார்.

Comments
Loading...