தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அனுமதிப்பெற்ற மாட்டிறைச்சி உண்ணும் விழாவை நடத்தவிடாமல் தடுத்த தமிழக காவல்துறை

beef-shopதிருவண்ணாமலையில் மாட்டிறைச்சி உண்ணும் விழாவில் மோதல் ஏற்பட்டது. பல்வேறு முற்போக்கு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் முதலில் அனுமதியளித்ததாக கூறப்படுகிறது.

 பின்னர் நிகழ்ச்சியை நடத்தவிடாமல் காவல்துறையினர் கெடுபிடி செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் காவல்துறையினருடன் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

 இது பின்னர் மோதலாக மாறியது. இதனை படம் பிடித்த செய்தியாளர்களை காவல்துறையினர் விரட்டியடித்ததுடன், அவர்களது கேமராவையும் பறித்தனர் இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.

Comments
Loading...