தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாத்ரி சம்பவம் : சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை – ராஜ்நாத் சிங் கருத்து

rajnathபாரதிய ஜனதா கட்சி மத அரசியலில் ஈடுபடுவதில்லை என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். அரசியல் ஆதாயம் பெறும் வகையில் மற்ற கட்சிகள் நடந்து கொள்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

 உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்நாத் சிங், அமைதியை சீர் குலைக்கும் வகையில் எந்த கட்சியும் நடந்துகொள்ள கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார்.

 தாத்ரியில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக முதியவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த அவர் சட்டம் ஒழுங்கை காப்பது மாநில அரசின் கடமை என்றும் மத்திய அரசு அதில் தலையிட முடியாது என்றும் கூறினார்.

 தாத்ரி சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க பிரதமர் தன்னை கேட்டுக்கொண்டுள்ளதாகவும் இச்சம்பவத்தில் நீதியை நிலைநாட்ட தான் முயன்று வருவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Comments
Loading...