தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அனுராதபுரத்தில் பஸ் நேருக்கு நேர் மோதி விபத்து! 38 பேர் படுகாயம்

24xnews (1) (1) - Copy - Copy - Copyஅநுராதபுரம் – பாதெனிய, மஹகல்கடவில பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 38 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தின் போது காயமடைந்துள்ள 38 பேரும், கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில், குறித்த 38 பேரில் 8 பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருநாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Loading...